கமல்ஹாசனை இயக்குவது இவர்கள் தான்!! தகவலை வெளியிட்ட அர்ஜுன் சம்பத்!!  - Seithipunal
Seithipunal


இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம், "ஜனநாயகம் தமிழகத்தில் கேலிக்கூத்தாக மாறிவிட்டது. ஜனநாயகம் பணநாயகம் ஆக மாறிவிட்டது. பணம் கொடுத்து வெற்றி பெற பல அரசியல்வாதிகள் துடிக்கின்றனர்.

Image result for durai murugan seithipunal

பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என திமுகவை சேர்ந்தவர்கள் திட்டமிடுகின்றனர். இதற்கு சாட்சி தான் துரைமுருகன் வீடு, குடோன்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம். காங்கிரஸ் கட்சியினர் நீட்டுக்கு விளக்கு அளிப்போம்.' என வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

ஆனால், அது சட்டப்படி நடக்க சாத்தியம் இல்லை. பொய்யான வாக்குறுதி. ஆனால், எதையாவது கூறி ஆட்சிக்கு வர நினைக்கின்றனர். அது நடக்காது. கமலஹாசனுக்கு மக்கள் மீது ஒன்றும் அவ்வளவாக அக்கறை கிடையாது. அது ஏற்படவும் ஏற்படாது.

Image result for kamal seithipunal

அவர் ஒரு நல்ல நடிகர். ஆனால், அவரால் அரசியலில் எதுவும் சாதிக்க முடியாது. அவர் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறார். மக்கள் மத்தியில் அவருக்கு ஒன்றும் வரவேற்பும் கிடையாது." என அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arjun sambath says about dmk and kamal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->