திமுக பிரமுகர் மகனுக்கு, 1 கோடி பணத்தை வங்கியில் திருடிக்கொடுத்த மேனேஜர்.. அரியலூர் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


வாடிக்கையாளருக்கு தெரியாமல் அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ. ஒரு கோடியே 28 இலட்சம் பணத்தை திருடிய சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் மற்றும் திமுக பிரமுகரின் மகன் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறையினர் கட்டப்பஞ்சாயத்து செய்து அனுப்பி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளையின் வாடிக்கையாளர் மருதை என்பவர், வங்கியில் தனது சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து தொழில் செய்வதற்காக ரூ. இரண்டு கோடி கடன் பெற்றுள்ளார். வங்கி கணக்கில் இருந்த பணத்தை அவரது ஒப்புதல் மற்றும் கையெழுத்து இல்லாமல், அந்த வங்கியின் மேலாளர் சூரிய நாராயணன் என்பவர் திமுக பிரமுகர் மகன் வீரவேல் என்பவருக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். 

எந்த ஒரு ஆவணத்திலும் மருதையின் கையெழுத்து இல்லாமல் ரூ. ஒரு கோடியே 28 இலட்சத்து 30 ஆயிரத்து 390 ரூபாய் கொஞ்சம் கொஞ்சமாக கையாடல் செய்யப்பட்டுள்ளது. தனது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது குறித்து அதிர்ந்து அதிர்ச்சியான மருதை, கும்பகோணத்தில் உள்ள சிட்டி யூனியன் வங்கியின் மேலதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். சிட்டி யூனியன் வங்கி விசாரணை அறிக்கையில், சூரியநாராயணன் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது உண்மை என்பது தெரிய வந்தது. 

இந்த நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்த அதிகாரிகளின் அனுமதியை தொடர்ந்து, வங்கி நிர்வாகம் சூரிய நாராயணனை பணியிடை நீக்கம் செய்தது. மேலும், நிலுவையில் உள்ள கடன் தொகையைக் கட்டச் சொல்லி வங்கி நிர்வாகம் கடுமையாக மருதையை வற்புறுத்தியுள்ளது. இதனையடுத்து, வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது குறித்து அறிக்கை மற்றும் கையெழுத்து இல்லாத ஆவணங்கள் ஆகியவற்றை வைத்து, ஆதாரத்துடன் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் கடந்த 2019 ஆம் வருடம் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த வழக்கை விசாரிக்காமல் கிடப்பில் போட்ட காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வந்துள்ளனர். இதனையடுத்து, டி.ஜி.பி திரிபாதியிடம் புகார் அளித்து அவரின் உத்தரவையும் கண்டுகொள்ளாமல் தாமதப்படுத்தி, அலட்சியம் காட்டி வந்த நிலையில் ஒரு வருடமாக பல காரணம் சொல்லி விசாரணையை தாமதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், இதுகுறித்து புகார் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சூரிய நாராயணன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், இருவரையும் கைது செய்யாமல் வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர். 

கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தை நாடிய மருதை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருவரும் தலைமறைவாக இருப்பதாக கூறி அரியலூர் காவல்துறையினர் வழக்கை தாமதப்படுத்தி வருவதாகவும் புகார் தெரிவிக்கவே, மூன்று மாத காலத்திற்குள் வழக்கை முழுமையாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. 

இதுவும் பலனில்லாது விசாரணை நாட்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த காவல் ஆய்வாளரின் செயல்பாடுகளை நிறுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், வங்கி மேலாளர் சூரியநாராயணன், திமுக பிரமுகரின் மகன் வீரவேல் ஆகியோரை அழைத்து சமாதானமாகப் போக சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 2 பேரையும் கைது செய்யாமல் எழுதி வாங்கிக்கொண்டு விசாரித்து அனுப்பி விட்டதாகவும் மருதை தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை ஏற்க மறுத்துள்ள எஸ்.பி பாஸ்கரன், வழக்கை விசாரிக்கும் காவல் ஆய்வாளருக்கு மட்டுமே  விசாரணை தகவல் தெரியும் என்று கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur SP Indirect Support DMK Supporter Son Case of CUB Bank Manager Money Theft Customer


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->