நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டு உள்ளோம்..! மக்கள் கண்ணீர்... நடப்பது என்ன?...!! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை ஆனந்தவாடி கிராமத்தில் அரசு சிமிண்ட் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள சுரங்கத்தை விரிவாக்கம் செய்வது குறித்த கருத்து கேட்பு கூட்டமானது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு வருகை தந்திருந்த மாவட்ட ஆட்சியர் இரத்நா மற்றும் சுற்றுசூழல் அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில்., இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் பேசிய சமயத்தில்., 

அரியலூர் மாவட்டத்தில் எங்க சிமிண்ட் ஆலையும் கருத்து கேட்பு கூட்டத்தில் கூறிவாறு தகுந்த முறைகளை பின்பற்றவில்லை. அரசுடைய விதியின் படி சுரங்கத்தை மூடுவதும் இல்லை. இதனால் விவசாயமானது பெருமளவு பாதிக்கப்படுகிறது. 

இதனால் மாவட்ட நிர்வாகம் படிப்படியாக சிமெண்ட் ஆலையை படிப்படியாக மூட வேண்டும். அரசு மற்றும் தனியார் சிமிண்ட் ஆலைகள் நிலம் வாங்கியவர்களுக்கு சரிவர பணிகளை கொடுப்பதில்லை. இதற்கு நல்லதொரு முடிவை ஆட்சியர் உறுதி தர வேண்டும். 

எவ்வாறு செய்யும் பட்சத்தில் சுரங்கத்திற்கு எங்களின் அனுமதியை வழங்குகிறோம்... ஆலைகள் மற்றும் குவாரிகளில் இருந்து வெளியேறும் வாகனத்தால் ஏற்படும் விபத்துகளில் பலர் உயிரிழந்தும்., ஊனமுற்றும் உள்ளனர். இவர்களுக்கு இன்று வரை சரிவர எந்த நிறுவனம் நிவாரணமும் வழங்கவில்லை. நாங்கள் சிமிண்ட் ஆலையால் கொஞ்சம் கொஞ்சமாக இருந்துகொண்டு உள்ளோம் என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ariyalur peoples suffer for industry


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->