கரோனாவால் பாதிக்கப்பட்ட அரியலூர் பெண் குடும்பத்தை தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை..!! - Seithipunal
Seithipunal


உலகளவில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த 25 வயது பெண்மணி, கரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

இதனைத்தொடர்ந்து இவரது குழந்தை, தாய், தந்தை மற்றும் அண்ணன் என்று இவரது குடும்பத்தை சார்ந்த 14 பேரை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தியுள்ளனர். இவர்களின் இரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்மணி தீவிர கண்காணிப்பில் உள்ள நிலையில், பாதிக்கப்ட்ட பெண்மணி சென்னையில் இருக்கும் வேளச்சேரி வணிக வளாகத்தில் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் உடல் நலம் சரியில்லாது காய்ச்சல் அறிகுறியுடன் கடந்த 25 ஆம் தேதியன்று அரியலூருக்கு வந்துள்ளார். 

பின்னர் அரியலூர் மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதியான நிலையில், இவருடன் அருகில் இருந்த நபர்கள் மற்றும் வெளியிடத்திற்கு சென்று வந்தது தொடர்பான தகவலை காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur girl Isolated due to corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->