ஆவணங்கள் இன்றி வங்கி வாகனத்தில் ரூ.5 கோடி.. அரியலூர் பறக்கும்படை அதிரடி.! - Seithipunal
Seithipunal


அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம், பாண்டிச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு என அரசியல்களம் பரபரப்பாக இருந்து வருகிறது. 

தேர்தலில் மக்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் போன்றவை விநியோகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், தேர்தல் ஆணையம் சார்பாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. 

அவ்வப்போது கட்சிகளின் சார்பாக மக்களுக்கு விநியோகம் செய்யப்பட கொண்டு செல்லப்படும் குக்கர் போன்ற பரிசுப்பொருட்கள் காவல் துறையினர் மற்றும் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர் சரவணன் தலைமையிலான பறக்கும் படை, கும்பகோணத்திலிருந்து டெம்போ வாகனத்தில் வந்த அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபாயை பறிமுதல் செய்து, அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur Flying Squad Captured Without Documents Bank Money 5 Crore


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->