உடல் எடை குறைந்ததால் கேன்சர் பயம்... நீதிமன்ற அலுவலகத்திலேயே உயிரை மாய்ந்த ஊழியர்.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில், சிறப்பு குடும்பநல நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்ற நிர்வாக அலுவலராக பெரம்பலூர் மாவட்டம் கீழபெரம்பலூர் பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், நீதிமன்ற கோப்புகளை தனது அறைக்கு சென்று பார்த்துவிட்டு வருவதாக கூறிச்சென்ற நெடுஞ்செழியன், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனையடுத்து நீதிமன்ற பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரின் சட்டைப்பையில் இருந்த கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். 

இதற்குள்ளாகவே தகவலை அறிந்த தலைமை நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு முன்பு குவிந்ததால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நெடுஞ்செழியனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், " கடந்த 2004 ஆம் வருடம் ஏற்பட்ட சாலை விபத்தின் போதும், 2007ஆம் வருடம் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாகவும் கடுமையான பிரச்சனைகளை சந்தித்தேன். 

ஆனால், நீதிமன்ற நடவடிக்கை காரணமாக பல சிகிச்சைகளையும் பெற்று வந்தேன். கொரோனா காலத்திலும் பல உதவிகள் நீதிமன்றத்தின் மூலமாக எனக்கு கிடைத்தது. தற்போது நாளுக்கு நாள் உடல் எடை குறைந்து வருகிறது. இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. 

எனக்கு கேன்சர் இருக்குமோ? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இந்த மனபயத்தால் என்னால் வாழ  முடியவில்லை. என் முடிவை நான் தேடிக்கொள்கிறேன். இதற்கு யாரும் காரணம் கிடையாது | என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து பயத்தில் நெடுஞ்செழியன் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur Family Welfare Court Employee Nedunchezhiyan Suicide Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->