பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்கிய அரியலூர் துணை காவல் கண்காணிப்பாளர்.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை பொன்பரப்பி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பதினோராம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டு, இணைய வகுப்புகள் நடந்து வருகிறது. 

பனிரெண்டாம் வகுப்பு பள்ளிகளில் நடந்து வரும் நிலையில், பள்ளிக்கு வருகைதரும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி இருக்கின்றனர். ஆசிரியர்களும் இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருந்து வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று பொன்பரப்பி அரசு பள்ளிக்கு வந்த 5 மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வரவில்லை. இதனையடுத்து, அவர்கள் 5 பேரையும் ஆசிரியர் முகக்கவசம் அணிந்து நாளை பள்ளிக்கு வாருங்கள் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். 

இதனையடுத்து மாணவர்கள் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்த நிலையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த அரியலூர் துணை காவல் ஆணையர் மதன் மாணவர்களை அழைத்து விசாரணை செய்துள்ளார். இதன்போது, முகக்கவசம் அணியாமல் வந்தது பற்றியும், ஆசிரியர் வீட்டிற்கு செல்ல அறிவுறுத்திய நிலையில், முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு செல்ல கடைக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தனது காரில் வைத்திருந்த முகக்கவசத்தை வழங்கிய காவல் ஆணையர் மதன் அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தார். மேலும், ரூ.6 ஆயிரம் செலவில், துவைத்து பயன்படுத்தும் வகையில் உள்ள 150 முகக்கவசத்தை கடையில் வாங்கி, பள்ளிக்கு சென்று ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கி நன்றாக படிக்க கூறி அறிவுரை வழங்கினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: இந்தியா உட்பட தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள். தனித்திருங்கள்.. விலகியிருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur DSP Madhan give Facemask to School Students 26 March 2021


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->