கொரோனா பாதித்தும் டிக்டாக் வீடியோ.! அரியலூர் பெண் ஆஸ்பத்திரியில் அட்டகாசம்.!  - Seithipunal
Seithipunal


அரியலூர் அரசு மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்ட நோயாளியின் செல்போனை பயன்படுத்திய 3 தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். 

சென்னையை சேர்ந்த இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

இந்த நிலையில் அந்தப் பெண் கரோணா வார்டில் இருந்த பொழுது தன்னுடைய செல்போனில் டிக்டாக்வீடியோ செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. 

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 2 பெண்கள் உட்பட மொத்தமாக மூன்று பேர் நோயாளியிடம் இருந்த செல்போனை வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த மருத்துவமனை அதிகாரிகள் அவர்களை பணி நீக்கம் செய்து அந்த பெண் இருக்கும் வார்டிலேயே தனிமை படுத்தி இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur corona patient tiktok video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->