பாம்பு கடிக்கு மருந்து இல்லை... பரிதாபமாக உயிரிழந்த சிறுமி.. அரியலூரில் சோகம்.! - Seithipunal
Seithipunal


பாம்பு கடித்த சிறுமி, சரியான சிகிச்சையின்றி உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை மாராக்குறிச்சி பகுதியை சார்ந்தவர் ராஜு. இவரது மகள் அட்சயா. தற்போது ஊரடங்கு பள்ளிகள் விடுமுறை காரணமாக சிறுமி வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமி தனது வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். 

இந்த சூழ்நிலையில், சிறுமியை பாம்பொன்று கண்டித்துள்ளது. இதனால் சிறுமி அலறிய நிலையில், விரைந்து வந்த பொதுமக்கள் பாம்பை அடித்துவிட்டனர். பின்னர் சிறுமியை அங்குள்ள மணக்குடையான் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 

ஆனால், அங்கு விஷக்கடிக்கு மருந்து இல்லை என்று கூறி, அரியலூர் அல்லது செந்துறை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறியுள்ளனர். இந்த நிலையில், சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ளார். இவரின் உடலை கண்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக விரக்தி தெரிவித்த உள்ளூர் மக்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஷக்கடிக்கு மருந்து இருந்தால் அல்லது முதலுதவி செய்யும் சிகிச்சை இருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என்றும், கிராமப்புற பகுதிகளில் பாம்பு கடிப்பது இயல்பாக இருந்தாலும், தகுந்த நேரத்தில் மருந்து கிடைக்காமல் இருப்பதால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இனியாவது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur child died no treatment for Snake Byte


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->