புவனகிரி: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு திண்ணை பிரச்சாரம்.. 1989 போராட்ட தியாகிக்கு கௌரவம்..! - Seithipunal
Seithipunal


கம்பாபுரம் ஒன்றியம் சேப்ளாநத்தம் கிராமம், காமராஜ்நகர் கிராமத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து விழிப்புணர்வு திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டின் பலனை கிராமங்கள் தோறும் எடுத்து சொல்லும் விதமாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸின் ஆலோசனைப்படி பாட்டாளி மக்கள் கட்சியினர் திண்ணை பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

கிராமங்கள் மற்றும் நகரங்களில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரங்களில் கூடிய மக்கள், 10.5% உள் ஒதுக்கீடு பெற்றுத் தந்து, வன்னியர்களின் வாழ்வின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மருத்துவர் இராமதாசுக்கு மனமார நன்றி தெரிவித்துக்கொண்டனர். 

இந்நிலையில், இன்று புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பாபுரம் ஒன்றியம் சேப்ளாநத்தம் கிராமம், காமராஜ்நகர் கிராமத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து மாநில துணை பொது செயலாளர் முனைவர் த அசோக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தி திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த திண்ணை பிரச்சாரத்தின் போது வருகை தந்திருந்த 1989 இட ஒதுக்கீடு போராளி இராஜேந்திரன் அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவம் செய்யப்பட்டது. 

Tamil online news Today News in Tamil
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur Bhuvanagiri PMK Make Shrine Campaign about Vanniyar Reservation Victory


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->