#Breaking: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு விரைவில் சம்மன்... இலஞ்ச ஒழிப்புத்துறை திட்டம்..!! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் வீட்டில் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு சம்மன் வழங்கி விசாரணை செய்ய இலஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துதுறை முன்னாள்‌ அமைச்சர்‌ எம்.ஆர். விஜயபாஸ்கர்‌ பெயரிலும்‌, அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது தம்பி சேகர்‌ ஆகியோர்‌ பெயரிலும்‌ மற்றும்‌ தான்‌ பங்குதாரராக உள்ள நிறுவனங்கள்‌ பெயரிலும்‌ தனது பணிக்காலத்தில்‌ வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள்‌ சேர்த்துள்ளது சம்பந்தமாக கடந்த 21.07.2021ஆம்‌ தேதி கரூர்‌ ஊழல்‌ தடுப்பு மற்றும்‌ கண்காணிப்பு பிரிவில்‌ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்‌ மற்றும்‌ அவரது உறவினர்கள்‌, அவர்‌ பங்குதாரராக உள்ள நிறுவனங்கள்‌, அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள்‌ என சந்தேகிக்கப்பட்ட நபர்களின்‌ இருப்பிடம்‌ உட்பட மொத்தம்‌ 26 இடங்களில்‌ ஊழல்‌ தடுப்பு மற்றும்‌ கண்காணிப்புத்துறையினரால்‌ நேற்று (22.07.2021) ஆம்‌ தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த சோதனையில்‌ பணம்‌ ரூ.25,56,000 மற்றும்‌ சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள்‌, காப்பீட்டு நிறுவனங்களில்‌ செய்யப்பட்ட முதலீடுகள்‌ மற்றும்‌ நிறுவனங்களில்‌ மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள்‌ கைப்பற்றப்பட்டன. 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சம்மன் வழங்கி விசாரணை செய்ய இலஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது மனைவி, சகோதரர், நிறுவன பங்குதாரர்கள் ஆகியோருக்கு சம்மன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anti-Bribery Department plans to Issue Sampan Former Minister Vijayabaskar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->