அண்ணா மேலாண்மை நிலையம் - "அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி" என பெயர் மாற்றம் - தலைமை செயலாளர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அண்ணா மேலாண்மை நிலையம் பெயரை மாற்றி தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா மேலாண்மை நிலையம், தமிழ்நாடு அரசின் தலைமை பயிற்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த அண்ணா மேலாண்மை நிலையத்தில், இளநிலை உதவியாளர்கள் முதல் இந்திய ஆட்சி பணியாளர்கள் வரை உள்ள தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் வெ. இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " அண்ணா மேலாண்மை நிலையம் இனி வரும் நாட்களில் இருந்து, "அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி" என அழைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிர்வாக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் தான், அண்ணா மேலாண்மை நிறுவனம் என்பதை கருத்தில் கொண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தலைமை செயலாளரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா மேலாண்மை நிலையம் என அழைக்கப்பட்டு வந்ததால், செயல்பாட்டில் குழப்பம் நிலவி வந்த நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anna Management Name Changed As Anna Administrative Staff College Tamilnadu Chief Secretary Irai Anbu IAS


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->