பாஜகவில் இணையும் அடுத்த திமுக எம்.எல்.ஏ?! வெளியான செய்தியால் பதறியடுத்து கொண்டு வந்த அவசர அறிக்கை!   - Seithipunal
Seithipunal


சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திமுகவைச் சேர்ந்த செல்வம் டெல்லிக்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். மேலும்  சில திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி சென்று பாஜக தலைவர்களை  சந்திக்கலாம் என தகவல் வெளியானது. 

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அண்மையில், கட்சியின் தலைமைக் கண்டிப்புக்கு ஆளான நிலையில், அவர் நியமித்த நிர்வாகிகளை மாற்றி பழைய நிர்வாகிகளை மீண்டும் நியமித்தது. இந்த நிலையில் அதிருப்தியில் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைவார் என கூறப்பட்டு வந்தது. இந்த செய்தியானது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி கொண்டு இருந்தது. இந்நிலையில் அப்படியெல்லாம் இல்லை என அவர் தன்னிலை விளக்கமளித்துள்ளார். 

அவர் அளித்த விளக்கமானது, "கடந்த சில நாட்களாக சில சமூக விரோதிகள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி அவதூறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அந்த அற்பர்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டர் கழகத் தலைவர் தளபதி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு இதய சுத்தியோடு தீவிரமாக பணியாற்றி வருவதை கழகத் தலைவர் நன்கறிவார். என்னை கழகத்திலிருந்தும் தலைவர் இடம் இருந்தும் எவராலும் பிரிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இனியும் இதுபோன்ற விஷம பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்

 

இதன்மூலம் அவர் மீது வெளியான வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அதிமுகவிலிருந்து திமுக வந்து மீண்டும் அதிமுக சென்று மீண்டும் திமுகவிற்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anitha Radhakrishnan Explanation about his political stand


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->