அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 156 அங்கன்வாடி பணியாளர், 6 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 201 அங்கன்வாடி உதவியாளர் பதவிகளுக்கு இனச்சுழற்சி முறையில் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்ய தகுதியான உள்ளுர் பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

ஆண்டிபட்டியில் அங்கன்வாடி பணியாளர் 21, குறு அங்கன்வாடி பணியாளர் 2, அங்கன்வாடி உதவியாளர் 17. போடிநாயக்கனூர் அங்கன்வாடி பணியாளர் 15, அங்கன்வாடி உதவியாளர் 19, சின்னமனூர் அங்கன்வாடி பணியாளர் 17, அங்கன்வாடி உதவியாளர் 13, கம்பம் அங்கன்வாடி பணியாளர் 51, அங்கன்வாடி உதவியாளர் 54, மயிலாடும்பாறை அங்கன்வாடி பணியாளர் 14, குறு அங்கன்வாடி பணியாளர் 2, அங்கன்வாடி உதவியாளர் 12, பெரியகுளம் அங்கன்வாடி பணியாளர் 21, அங்கன்வாடி உதவியாளர் 28, தேனி (ஊரகம்) அங்கன்வாடி பணியாளர் 8, குறு அங்கன்வாடி பணியாளர் 1, அங்கன்வாடி உதவியாளர் 16, தேனி (நகர்புறம்) அங்கன்வாடி பணியாளர் 5, அங்கன்வாடி உதவியாளர் 20, உத்தமபாளையம் அங்கன்வாடி பணியாளர் 4, குறு அங்கன்வாடி பணியாளர் 1, அங்கன்வாடி உதவியாளர் 22. என மொத்தம் 201 இடங்கள் காலியாக உள்ளன.

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்பிக்கும் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்.19-ஆம் தேதிக்குள் (பிப்.17-ஆம் தேதி தவிர) காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் வழங்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க வேண்டிய இடங்கள்:

ஆண்டிபட்டி- வட்டார வளர்ச்சி அலுவலகம், போடிநாயக்கனூர்- வட்டாட்சியர் அலுவலகம். சின்னமனூர்-வட்டார வளர்ச்சி அலுவலகம். கம்பம்-சார் ஆட்சியர் அலுவலகம், உத்தமபாளையம். .மயிலாடும்பாறை- வட்டார வளர்ச்சி அலுவலகம், மயிலாடும்பாறை. பெரியகுளம்-வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்.

தேனி (ஊரகம்)- தனித்துணை ஆட்சியர், சமூகப் பாதுகாப்புத் திட்டம், தேனி. தேனி (நகரம்)-மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், தேனி. உத்தமபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம்.

English Summary

Anganwadi Workers job announcement


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal