அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்! உதயநிதி புடுங்கி எடுத்தார்! உண்மையை போட்டுடைத்த சீமான்! - Seithipunal
Seithipunal


சுற்றி இருக்கும் தடுப்பு சுவரை சொல்லி இருப்பார்கள்! நட்ட ஒரு செங்கலையும் உதயநிதி எடுத்து சென்றார்!

நாம் தமிழர் கட்சி சார்பாக அரசு வழங்கும் இலவச திட்டங்களுக்கு எதிரான பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த பொது கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்பொழுது நிருபர் ஒருவர் மதுரை எய்ம்ஸ் 95 சதவீதம் பணிகள் முடிந்து விட்டதாக பாஜக தேசிய தலைவர் நட்டா கூறியது பற்றி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் "இந்த திட்டம் ஏற்கனவே மத்திய சுகாதாரம் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸால் அடிக்கல் நாட்டப்பட்டது.

மீண்டும் அதே திட்டத்திற்கு பாஜக அரசு அடிக்கல் நாட்டி செங்கல் ஒன்றை நட்டு வைத்தது. அந்த செங்கலையும் தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் தம்பி உதயநிதி பிடுங்கி எடுத்து விட்டார்.

பேச்சளவில் மட்டுமே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. 95 சதவீதம் பணி நிறைவு என்பது பாஜகவால் சொல்லப்படும் அப்பட்டமான பொய். அந்த வளாகத்தை சுற்றி தடுப்பு சுவர் மட்டுமே உள்ளது. 

தென்னிந்தியாவை நோக்கி பாஜகவின் பார்வை திரும்பியுள்ளது. கர்நாடகா வரை வந்து விட்டார்கள். மீதம் இருக்கும் தெலுங்கானா, ஆந்திரா,தமிழ்நாடு, கேரளாவின் பக்கம் தேர்தல் பணியை ஆரம்பித்துள்ளனர்" என பதில் அளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani Ramadoss started and Udhayanidhi rushed and took it


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->