கடற்கரையில் பிரச்சாரம் மேற்கொண்ட அன்புமணி!  - Seithipunal
Seithipunal


உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் முயற்சியாக, மத்திய மற்றும் மாநில அரசுகள், கால நிலை அவசர நிலையை உடனடியாக பிரகடனம் செய்யவேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பசுமை தாயகம் சார்பில், கடந்த ஒருவார காலமாக நடைபெற்றுவந்த கால நிலை அவசர நிலை பிரகடன பிரச்சாரத்தின் நிறைவு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ், உலக வெப்பமயமாதல் அபாயம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கொண்ட படகுகள் கடலுக்குள் செலுத்தப்பட்டும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பசுமைத்தாயகம் அமைப்பினர் பெருமளவில் கலந்து கொண்டனர். மேலும் தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், உலக வெப்பமயமாதலால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால், புயல், வெள்ளம் வறட்சி ஏற்பட்டு வருங்காலத்தில் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani campaign for declare climate emergency in besant nagar beach


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->