அதிர்ச்சி சம்பவம்…! 5 நாட்களாக தண்ணீர் தொட்டியில் மிதந்த ஆண் பிணம்…! அந்த தண்ணீரைக் குடித்த மக்களுக்கு ஏற்பட்ட தொற்று நோய்…! வேதனையுடன், அதிரடி உத்தரவிட்ட நீதி மன்றம்…! - Seithipunal
Seithipunal


 

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில், காவிரி கூட்டுக்குடி நீர் திட்டத்தின் மூலம், குடி நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் 1 லட்சம் மக்களுக்கு விநியோகம் செய்யப் படுகிறது. ராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளி அருகே, 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளவு கொண்ட நீர்நிலைத் தேக்கத் தொட்டி உள்ளது.

இந்த தண்ணீர் தொட்டியில் ஒரு ஆண் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அது பற்றித் தெரியாமலே,  அதன் பிறகும், அந்தக் குடிநீர் மக்களுக்கு விநியோகம் செய்யப் பட்டிருக்கிறது.

வர வர குடிநீர் துர்நாற்றம் வீசியது. இது பற்றி, மக்கள் எடுத்துச் சொல்லியும், அதிகாரிகள் கண்டு கொள்ளவி்ல்லை. பின், இந்த தண்ணீரைக் குடித்ததினால், குழந்தைகள் உட்பட ஏராளமான பேருக்கு தொற்று நோய் ஏற்ட்டது.

பின், மேல் நிலைத் தொட்டியில் பார்த்த போது, அழுகிய ஆண் பிணம் சிதைந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன் மதுரை ஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், இது அதிகாரிகளின் மெத்தனம். ராமநாதபுரம் போல், தமிழகத்தில் உள்ள அனைத்து தண்ணீர் தொட்டிகளில் மேலே சென்று ஆய்வு மேற் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “தமிழகத்தில் அரசு அதிகாரிகள் எப்படி வேலை செய்கிறார்கள்? என்பதற்கு, இந்த சம்பவமே சாட்சி. எதையும் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை.

இதற்கு நாம் சுதந்திரம் வாங்காமலே இருந்திருக்கலாம்.

மனுதாரர் குறிப்பிடும் விவகாரம் மிக முக்கியமானது. இந்த சம்பவத்திற்கு, சுகாதாரத் துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம், ராமநாதபுரம் கலெக்டர் மற்றும் கமிஷனர் உடனடியாக பதில் அளிக்க வேண்டும், என்று உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an bad incident in Ramnad


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->