ஆயுத பூஜை – விஜயதசமி நல்வாழ்த்துகள்.! - டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


டிடிவி தினகரன் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உழைப்பின் சிறப்பையும், தொழிலின் மேன்மையையும் சொல்லும் ஆயுத பூஜை மற்றும் வெற்றித்திருநாளான விஜயதசமியைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாயாய் உலகைக் காத்திடும் அன்னை பராசக்தியை, நாம் வீரத்தோடு விளங்கிட துர்க்கை வடிவில் மூன்று நாட்களும், செல்வம் பெருகிட லட்சுமி வடிவில் மூன்று நாட்களும், கல்வியிலும் கலைகளிலும் சிறந்திட சரஸ்வதி வடிவில் மூன்று நாட்களும் வழிபடுவது நவராத்திரியின் சிறப்பாகும். இதன் நிறைவில் அவரவருக்கு வாழ்வளிக்கிற தொழிலைப் போற்றி வணங்கிடும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. 

இதைப் போன்றே விஜயதசமி அன்று தொடங்கும் நற்செயல்கள் வெற்றிமுகமாகும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை. இந்நன்னாளில் அனைத்து தொழில் செய்பவர்களும் இன்னல்களிலிருந்து மீண்டெழுந்து இனி எல்லாம் நலமே என்கிற அளவிற்கு நன்மைகளைப் பெற்றிட வாழ்த்துகிறேன். உழைப்புதான் இந்த உலகை இயக்குகிற உன்னத சக்தி என்பதை நிரூபிக்கும் விதமாக உழைப்பவர்கள் அனைவரும் உயர்ந்திட வேண்டுமென அன்னை பராசக்தியை வேண்டுகிறேன்.

தீயசக்திகளை எந்நாளும் உறுதியோடு எதிர்த்து நின்று, நேர்மறை சிந்தனைகளோடும், நம்பிக்கையோடும் உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம் எனும் எண்ணத்தோடு, அனைவரும் வளமும் நலமும் பெற்று, ஆனந்தமாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK TTV Dhinakaran Wish to Ayudha Pooja and Vijaya Dashami Celebration 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->