அதிமுக - அமமுக - திமுக...! கே.என். நேரு முன்னிலையில் கட்சியில் இணைந்த பிரபலம்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு தாவிய ஒருவர், திமுகவில் இறுதியாக ஐக்கியமாகியுள்ளார்.

திருச்சி மாநகரின் முன்னாள் அதிமுக மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் சுப்பையா பாண்டியன். இவர் நேற்று திமுகவின் முதன்மை செயலாளர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான கே.என் நேருவை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். 

சென்னையில் உள்ள மயிலாப்பூரில் அமைந்துள்ள அமைச்சர் கே.என் நேருவின் இல்லத்தில் இந்த சந்திப்பு மற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுப்பையா பாண்டியன் நடைபெற்று முடிந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிட்ட மனோகரனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அகில இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வரும் சுப்பையா பாண்டியன், அதிமுகவில் இருக்கையில் திருச்சி மாநகர மாவட்ட மருத்துவ அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அமமுகவில் அவருக்கு சொல்லிக்கொள்ளும் பொறுப்பு கிடைக்கவில்லை எனபதால், திமுகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

திருச்சியில் கார்த்திக் சித்த மருத்துவமனை நடத்தி வரும் சுப்பையா பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளது அதிமுக மற்றும் அமமுக மாவட்ட நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுப்பையா பாண்டியனின் மனைவி தமிழரசி சுப்பையா அதிமுகவிலேயே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK Supporter Join DMK In front of Minister KN Nehru


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->