இமானுவேல் தேவேந்திரர் நினைவுதினம்... அமமுக சார்பில் அஞ்சலி..!! - Seithipunal
Seithipunal


தீண்டாமையை ஒழிப்பதற்கு முனைப்புடன்‌ பாடுபட்ட திரு.இம்மானுவேல்‌ சேகரனாரின்‌ 63 வது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் இருக்கும் அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் அஞ்சலி செலுத்துவது வழக்கமான விஷயமாகும். தற்போது கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தீண்டாமையை ஒழிப்பதற்கு முனைப்புடன்‌ பாடுபட்ட திரு.இம்மானுவேல்‌ சேகரனாரின்‌ 63 வது நினைவு நாளையொட்டி கழக பொதுச்செயலாளர்‌ திரு.டிடிவி தினகரன்‌ அவர்களின்‌ சார்பில்‌: இராமநாதபுரம்‌ மாவட்டம்‌, பரமக்குடியில்‌ அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில்‌ கழக தலைமை நிலைய செயலாளரும்‌, முன்னாள்‌ சட்டமன்ற. உறுப்பினருமான திரு. உேமாதேவன்‌ அவர்களும்‌, கழக அமைப்பு செயலாளரும்‌, முன்னாள்‌ அமைச்சருமான திரு.வ.து.நடராஜன்‌ அவர்களும் கலந்து கொண்டனர்.‌ 

மேலும், கழக அமைப்பு செயலாளரும்‌, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினருமான நிலக்கோட்டை திரு.8.தங்கதுரை அவர்களும்‌, கழக அமைப்பு செயலாளர்‌ மண்டபம்‌ திரு.0.முனியசாமி அவர்களும்‌, கழக இதய தெய்வம்‌ அம்மா பேரவை செயலாளரும்‌, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினருமான திரு.8.மாரியப்பன்‌ கென்னடி அவர்களும்‌, கழக புரட்சித்தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ இளைஞர்‌ அணி செயலாளர்‌ திரு.டேவிட்‌ அண்ணாதுரை அவர்களும்‌, கழக மருத்துவர்‌ அணி செயலாளர்‌ டாக்டர்‌.8.முத்தையா அவர்களும்‌, இராமநாதபுரம்‌ மாவட்ட கழக செயலாளர்‌ திரு.வ.து.ந.ஆனந்த்‌ அவர்களும்‌, சிவகங்கை மாவட்ட கழக செயலாளர்‌ தேர்போகி திரு.பாண்டி அவர்களும்‌ மற்றும்‌ நிர்வாகிகளும்‌ கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்‌ " என்று கூறப்பட்டுள்ளது..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK Party Tribute to Immanuvel Devendrar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->