2ஜி, 3ஜி, 4ஜி க்கு புது விளக்கம் அளித்த அமித் ஷா!  - Seithipunal
Seithipunal


பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அமித் ஷா பேசுகையில் ‘‘சோனியா காந்தி ராகுலை பிரதமராக்குவது குறித்து கவலைப்படுகிறார். ஸ்டாலின் உதயநிதியை முதல்வராக்குவது குறித்து கவலைப்படுகிறார். அவர்கள் ஊழல், பிரித்தாளும் அரசியலை பின்பற்றுகிறார்கள் என பேசினார். 

மேலும் காங்கிரஸ் ஆட்சியில் 12 லட்சம் கோடி ஊழலில் ஈடுபட்டது. அந்த நேரத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. அதேபோல 2ஜி, 3ஜி என அனைத்து ஜி-களும் தமிழகத்தில் உள்ளன. 2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் இரண்டு தலைமுறை. 3ஜி என்றால் கருணாநிதி குடும்பத்தின் 3 தலைமுறை என்று அர்த்தம்" எனக் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amith Shah Explain about 2G 3G 4G 28 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->