மணல் கடத்தலால் சேதமடையும் குடிநீர் குழாய்கள்..! - Seithipunal
Seithipunal


பாலாற்றில் இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு மணல் கடத்தபடுவதால் அங்குள்ள குடிநீர் குழாய்கள் சேதமடைகின்றன.

பாலாற்றிலிருந்து ஒக்கேனகல் கூட்டுகூடிநீர் திட்டத்துக்கான குடிநீர்குழாய்கள் வேலூர் வரை கொண்டு செல்லப்படுகின்றன். இந்திலையில் இரவு நேரங்களில்  பொக்லைன் மூலம் மணல் அள்ளி கடத்தப்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அங்குள்ள தனியார் தொழிற்சாலைக்கு பின்பு உள்ள பகுதிகளிலிருந்து அதிக அளவில் மணல் கடத்தல் நடைபெறுகின்றன. இரவு 8 மணிக்கு மேல் அதிகாலை 5 மணி வரை பொக்லைன் கொண்டு பாலாற்றில் மணல் அள்ளப்படுவதால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் சேதமடைந்தமடைந்து  பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகின்றது.

இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் கூறியுள்ளதாவது: பாலாற்றில் மணல் கடத்தல் சமீபத்தில் அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் குழாய்கள் செதமடைகின்றன். மணல் கடத்தல் அதிகமானதால் பாலாறு தனது அடையாளத்தை மெல்ல இழந்த்து வருகின்றது. எனவே, பாலாற்றை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இது தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினரிடம் கேட்டபோது, "எஸ்.பி. தனிப்படை காவல் துறையினர் ஆம்பூர் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் மணல் கடத்தலில் ஈடுபடுவோரை கண்காணிக்கபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர். இருப்பினும், ஆம்பூர் வட்டாரத்தில் கண்காணிப்பை அதிகரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambur Sand Smuggling by Anti Socialists


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->