அவசர அவசரமாக அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை!! ஒன்று கூடிய மக்கள்!! நிறைவேறாத ஆசை!! - Seithipunal
Seithipunal



புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி என்னும் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதி மக்கள் அந்த ஊரின் சாலை ஓரத்தில் சட்டமேதை அம்பேத்கரின் சிலையை நிறுவுவதற்கு முடிவு செய்துள்ளனர். ஆனால் அரசாங்கத்திடம் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் சிலையினை வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

இது பற்றிய தகவல் காவல்துறையின் செவிக்கு சென்றுள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்கள், அந்த ஊர் மக்களிடம் நீங்கள் அனுமதி வாங்காமல் இந்த சிலையை வைக்க கூடாது என கோரி. சிலையை அகற்ற உத்தரவிட்டனர். ஆனாலும் அப்பகுதி மக்கள் சிலையை அகற்ற விரும்பாமல், சிலை வைப்பதில் என்ன தவறு என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

காவல்துறையினர், வேறு வழியே இல்லை சிலையை அகற்றியே ஆகவேண்டும் என உத்தரவிட்டனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சிலையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து அங்கு ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டனர். 

இதனையடுத்து நீண்ட நேரமாக அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி. நேற்று இரவு அம்பேத்கரின் சிலை அகற்றப்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்பிற்காக போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ambethkar statue removed


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->