திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு நல்ல செய்தி! தமிழக முதலவர் அதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பால், 

"திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட விவசாயிகளிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த 16 அமராவதி பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களில் குறுவை சாகுபடிக்காக அமராவதி ஆற்று மதகு வழியாக 6,048.00 மி.கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக அமராவதி பிரதான கால்வாய் வழியாக 2,661.00 மி.கன அடிக்கு மிகாமலும், ஆக மொத்தம் 8,709.00 மி.க. அடிக்கு மிகாமல் வரும் 20-ம் தேதி முதல் 2021-ம் ஆண்டு, பிப். 2-ம் தேதி முடிய அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 51 ஆயிரத்து 803 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்". என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amaravathi dam open in sep 20


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->