அலங்காநல்லூரில் சீறி பாயும் காளைகள்... அடக்க முயற்சிக்கும் காளையர்கள்...! - Seithipunal
Seithipunal


உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையோட்டி ஜல்லிகட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம்,  பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றவை.

அவனியாபுரம் , பாலமேடு ஜல்லிகட்டு போட்டு முடிவடைந்த நிலையில் நேற்று நடைபெற இருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக இன்று ஓத்திவைக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு போட்டி தொடங்கியது.

இந்த போட்டியில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.  ஒரு சுற்றுக்கு 30  மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.  150 பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுள்ளனர்.

 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. அதேபோன்று ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்ககாசு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Allanganallur Jallikattu stared


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->