தமிழகத்தில் மீண்டும் அனைத்து பள்ளிகளும் மூடல்.? தமிழக அரசு எடுத்த முடிவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, மாணவர்களின் நலன் கருதி கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, கொரோனா வழிகாட்டும் நடைமுறைகள் உடன் வகுப்புகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டது. 

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும், ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 10-ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனினும் ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது பொதுத்தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுத் தேர்வு நடைபெற உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

all school may be closed in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->