தமிழகத்தில் 8 புதிய கொரோனா கேஸ்! ஒரே இடத்தில் இருந்த துயரம்! தேடிப்பிடித்த சுகாதாரத்துறை!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 42 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது 8 பேர் புதியதாக பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து இருந்தார். 

சென்னை டிஎம்ஸ் வளாகத் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ரஜேஷ் தமிழகத்தில் மேலும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் தமிழகத்தில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த எட்டு பேர் குறித்த முழுமையான விவரங்கள் அவர் வெளியிடவில்லை. சிறிது நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டர் மூலம் அவர்கள் யார் என்பதனை தெரியப்படுத்தியுள்ளார். அவர்கள் அனைவருமே ஈரோட்டில் கொரோனவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் தாய்லந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதுவும் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நான்கு பேர் என தெரிய வந்துள்ளது. 

இன்று உறுதி செய்யப்பட்டவர்கள் அந்தப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்களை சுகாதாரத்துறை ஏற்கனவே பாதித்தவர்களின் தொடர்புகளை தேடும் போந்து கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது. நான்கு பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் ஒருவர் மரணமடைந்தார். தற்போது 45 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

all new 8 positive cases are in erode


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->