குடிகார கொத்தனாரின் வீரம்.. காவல்துறையை கண்டதும் கழிந்தோடிய சோகம்...!! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை அடுத்து கடை முன்பு போராட்டம் நடத்தப்போவதாக கிராம பெண்கள் அறிவித்தனர்.

கிராம பெண்கள் அறிவித்த போராட்டத்தால் 11 மணி ஆகியும் டாஸ்மாக் கடையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. கடை திறக்கப்படாமலேயே போய்விடுமோ என்ற அச்சத்தில் போராட்டத்தை அறிவித்த பெண்களுக்கு முன்பாகவே அங்கு குடிமகன்கள் ஒன்று திரண்டனர். பதினோரு மணிக்கு மேல் ஆகியும் இன்னமும் ஏன் கடையை திறக்காமல் இருக்கிறீர்கள் என ஒரு குடி மகன் பிரச்சனையை தொடங்கி வைக்க மற்றொரு குடிமகன் அங்கு ஒன்றுகூடியிருந்த குடிமகன்களை உசுப்பேற்றினார். உடனே கடை அருகே கொத்தனார் வேலையில் ஈடுபட்டிருந்த ஒரு கொத்தனார் ஒருவர் டாஸ்மாக் கடையை ஏன் திறக்கவில்லை குடிக்காமல் எனக்கு கை உதறுகிறது இங்கு கடையை திறக்கவில்லை என்றால் நான் எங்கே போவேன் என அங்கிருந்த ஒரு போலீசிடம் நியாயம் கேட்டு பொங்கி எழுந்தார்.

சிறிது நேரத்தில் டிஎஸ்பி மற்றும் வேளாங்கண்ணி ஆய்வாளர் தலைமையில் கூடுதல் போலீசார் அங்கு வரவே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குடிமகன்கள் மெல்ல அங்கிருந்து நடையைக் கட்டினர். தனியாக வந்த போலீசிடம் பொங்கி எழுந்த குடிகார கொத்தனார் ஆய்வாளரை பார்த்ததும் ஒன்றும் தெரியாதவர் போல் மீண்டும் தன் வேலையை பார்க்க தொடங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

alcohol drinkers protest opposite of tasmac


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->