#BREAKING_NEWS 15 காளைகளை அடக்கிய பொங்கல் வீரன்.! களத்தில் நின்று விளையாடிய வீரதீர காளைகள்.!! அனல்பறந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.!!! - Seithipunal
Seithipunal


இன்று காணும் பொங்கல் திருவிழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக மதுரை மாவட்ட அலங்காநல்லூரில் இன்று, உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு  நடந்து முடிந்துள்ளது. 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். இதில் 800 மாடுபிடி வீரர்களும், 1400 காளைகளும் பங்கேற்றனர்.

போட்டி தொடங்கும் முன் மாடுபிடி வீரர்கள் விழா துவங்கும் முன்னரே அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று கொண்டனர். 5 அவசர உதவி ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, சுமார் 10 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில இருந்தனர்.

இந்நிலையில், 9 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 729 காளைகள், 697 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. அலங்காநல்லூர் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 20 மாடுபிடி வீரர்கள் உட்பட 36 பேர் காயம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று உள்ளது. 

இந்த வருடம் சிறந்த வீரராக 15 காளைகளை பிடித்த ரஞ்சித் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த காளையாக பரம்பப்பட்டி சென்னியம்மன் காளை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்ட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

alankanallur jallikattu end


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->