அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... வீரர்கள் தேர்வு! கொண்டாட்டத்தில் தமிழர்கள்! - Seithipunal
Seithipunal


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக, தற்போது மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. 

இதனிடையே, மாவட்டவாரியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி - அவனியாபுரம், 16ம் தேதி - பாலமேடு, 17ம் தேதி - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது  

அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில், தச்சங்குறிச்சியில் 14ஆம் தேதி, வடமலை புதூரில் 18ஆம் தேதி, கீழப்பனையூரில் 19ஆம் தேதி, விராலிமலையில் 20ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு, மொத்தம் 876 வீரர்கள் கலந்து கொண்ட தேர்வில் 28 பேர் நிராகரிக்கப்பட்டனர்.

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது. 
 

English Summary

Alanganallur Jallikattu in pongal


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal