அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கிய வீரருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.!! - Seithipunal
Seithipunal


நேற்று காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மதுரை மாவட்ட அலங்காநல்லூரில், உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 15 கலைகளை அடக்கிய ரஞ்சித் என்ற இளைஞருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். இதில் 800 மாடுபிடி வீரர்களும், 1400 காளைகளும் பங்கேற்றனர்.

சுமார் 10 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் களத்தில் இருந்தனர். 5 அவசர உதவி ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. காளையை அடக்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

9 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 729 காளைகள், 697 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. அலங்காநல்லூர் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 20 மாடுபிடி வீரர்கள் உட்பட 36 பேர் காயம் அடைந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 

இந்த வருடம் சிறந்த வீரராக 15 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமார் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த காளையாக பரம்பப்பட்டி சென்னியம்மன் காளை தேர்வு செய்யப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமார் அவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

alanganallur jallikattu first price


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->