வோடபோன் ஐடியா, ஏர்டெல் இணைந்து வெளியிட்ட அறிவிப்பு..! கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


பிற அலைபேசி நெட்ஒர்க்களுக்கும் அளவில்லாமல் பேசலாம் என்றும்., தாங்கள் விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி ஏர்டெல் மட்டும் வோடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ளது. 

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அழைப்பு மற்றும் இணைய பயன்பாடுகளுக்காக பேக்கேஜ் கட்டணம் 42 விழுக்காடு வரை அதிரடியாக உயர்த்தப்பட்டது. பிற நெட்ஒர்க்களுக்கு இதில் அதிகபட்சமாக 3,000 நிமிடங்கள் மட்டுமே பேச முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில்., கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 

talking,

இதனை தொடர்ந்து பிற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த அழைப்பு வரம்பு நீட்டிப்பு செய்யப்படுவதாக ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பை கவனித்த ஜியோ நிறுவனம்., ஆல் இன் ஒன் பிளான் மூலமாக பிற நிறுவனங்களை விட ஐந்து மடங்கு அதிகமாக இலவச அழைப்புகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. மேலும்., இவர்களுக்குள் உள்ள தொழிற்போட்டியால் கட்டணங்களை அதிகளவு உயர்த்தி வருவதாக வாடிக்கையாளர்கள் குற்றமும் சாட்டி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

airtel and vodafone company announced unlimited calls other network


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->