இதையுமா காப்பி அடிப்பீங்க மிஸ்டர்.. மு.க. ஸ்டாலினை கலாய்க்கும் அதிமுகவினர்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் இன்று காலை பிரச்சாரம் செய்யச் சென்ற மு.க ஸ்டாலின் தமிழக முதல்வரின் டெக்னீக்கை பின்பற்றியதாக அதிமுகவினர் கலாய்த்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் 2021 நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்தந்த கட்சிகள் சார்பில் கூட்டணிகளும் அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்களும் தங்களுக்கான தொகுதியில் சென்று வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். 

அந்த வகையில், அதிமுக கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று எடப்பாடி தாலுக்கா அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

இதன் போது தேர்தல் விதிமுறையின் படி தாலுகா அலுவலகத்திற்கு முன்னதாகவே கார் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து எளிமையாக நடந்து சென்று தனது விருப்ப மனுவை அளித்தார். இந்நிலையில், முதல்வரின் எளிமை மிகுந்த செயல்பாடு மக்கள் மத்தியில் பெறும் வைரலானது. இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

அதிமுக எது செய்தாலும் அதனை காப்பியடித்து கூறுவது, அதிமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களை மக்களிடம் நிறைவேற்றுவதாக பொய்யான வாக்குறுதி அளிக்கும் திமுகவின் செயல்பாடு, நேற்று முதல்வர் செய்ததையும் காப்பி அடிக்க வைத்துள்ளது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் இன்று காலை பிரச்சாரம் செய்யச் சென்ற மு.க ஸ்டாலின், அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனை அதிமுகவினர் நேற்று முதல்வர் வேட்புமனுத்தாக்கல் செய்ய சென்ற விஷயத்துடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Supporters Troll DMK MK Stalin about TN CM Simplicity Copycat by DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->