அதிகார அட்வைஸ் செய்யும் உடன் பிறப்பு.. ஜெயக்குமார் பகீர் ட்விட்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய கொரோனா பரவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்களும் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இப்படியே தமிழகத்தின் நிலை சென்றால் வரும் நாட்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பிற மாநிலங்களில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை கூட ஏற்படலாம் என மருத்துவ வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியடைந்த நிலையில், இன்று காலையே இரண்டு திமுக உறுப்பினர்களால் அம்மா உணவகம் சூறையாடப்பட்டு, பின்னர் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், அதிமுக ஜெயக்குமார் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " காவல்துறையாகவே மாறி பொதுமக்களையும், போலீஸையும் மாஸ்க் அணியச் சொல்லி அதிகார அட்வைஸ் செய்யும் உடன் பிறப்பு.. குறிப்பு : உடன்பிறப்பு மாஸ்க் அணியவில்லை என்பது குறிப்பிடதக்கது " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Jayakumar Tweet about DMK Supporter Atrocity


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal