தமிழகத்தின் தீய சக்திகள் திமுகவும், சசிகலாவும் தான்.. முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, அதர்மத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். சசிகலாவுக்கு எதிராக நாளை போராட்டம் நடத்தி, அவரை வளர்த்துவிட விரும்பவில்லை என அதிமுக ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள இராயபுரத்தில், தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொன்விழாவை சிறப்பிக்கும் பொருட்டு, வடசென்னை, தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம், அதிமுக செய்தி தொடர்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "நாகப்பட்டினம் மீனவர்கள் 23 பேர் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலில் எல்லை என்பது கிடையாது. காற்றின் வேகத்தில் அவர்கள் செல்வார்கள். கைது நடவடிக்கை, சித்ரவதைகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும். 

ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண் முயற்சி. இதனால் கட்சியில் எவ்விதமான பிளவும் ஏற்படாது. தமிழகத்தில் உள்ள இருபெரும் தீய சக்திகள் திமுக மற்றும் சசிகலா தான். அதிமுகவில் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளார்கள். எவ்வித தீய சக்தியும் அதிமுக தொண்டர்களை பிரிக்க முடியாது. 

ஊரக உள்ளாட்சி தேர்தல் அதிமுகவுக்கு பின்னடைவு கிடையாது. ஜனநாயக முறையில் நேர்மையாக தேர்தல் நடந்தால் வெற்றி, தோல்வி சமமாக இருந்திருக்கும். தேர்தல் ஆணையம் தேர்தலை அதிகாரிகளை வைத்து நடத்துவதற்கு பதில், கட்சி தொண்டர்களை வைத்து நடத்தியுள்ளது. 

இதற்கு திமுகவே நேரடியாக தேர்தலை நடத்தி இருக்கலாம். உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, அதர்மத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். சசிகலாவுக்கு எதிராக நாளை போராட்டம் நடத்தி, அவரை வளர்த்துவிட விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Former Minister Jayakumar Pressmeet Chennai Royapettah 15 Oct 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->