சிறந்த இந்தியா, தமிழகத்தை உருவாக்க அதிமுக - பாஜக கூட்டணி..! பிரதமர் மோடி பேச்சு.!! - Seithipunal
Seithipunal


பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் உள்ள அகத்தீஸ்வரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி பேசினார். இதன்போது பேசிய அவர், " திருவள்ளுவரின் சிலை மற்றும் விவேகானந்தரின் மண்டபம் இந்தியர்களை கவர்ந்து இருக்கிறது. 

இராமேஸ்வரம் - தனுஷ்கோடி பாதையை 50 வருடத்திற்கும் மேலாக யாரும் கண்டுகொள்ளாத சூழலில், அதனை பாஜக அரசு செய்தது. தமிழகத்தில் சாலைப்பணிகளை மேற்கொள்ள ரூ.1 இலட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பாஜக - அதிமுக கூட்டணியின் முழு கவனம் இந்தியா மற்றும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியை போல, தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கி உள்ளது. இந்திய மக்களுக்கான அரசு பாஜக அரசு. 

நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி, இந்தியாவை உயர்த்துவோம். சேவை செய்வதில் நாங்கள் ஜாதி மற்றும் மதத்தினை பார்ப்பதில்லை. விவசாயிகளுக்கு அதிகளவு கடனுதவி மற்றும் சந்தை வாய்ப்புகளை பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது. மீனவர்களின் நலனுக்கு ரூ.20 ஆயிரம் கோடி செலவில் பல திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கான வேலைவாப்புகள் வழங்குவதில் பாஜக அரசு முன்னுரிமை வழங்குகிறது " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK BJP Alliance Make Perfect and Develop India and Tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->