மன்னிப்பு கடிதம் கொடுத்த உடுமலை கவுசல்யா!! மீண்டும் கருணை காட்டிய நிர்வாகம்!! - Seithipunal
Seithipunal



உடுமலைபேட்டையை சேர்ந்த சங்கர் என்பவரை, கடந்த 2016ம் ஆண்டு கவுசல்யா தனது பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். எனவே, கவுசல்யாவின் கணவர் சங்கர் கொலை செய்யப்பட்டார். இதில் கவுசல்யாவையும் கொலை செய்ய முயன்றனர்.

அன்று நடந்த சம்பவத்தில் உயிர்த்தப்பிய கவுசல்யா, கனவரை இழந்ததனால் அவரது கொலைக்கு காரணமான தனது உறவினர் மற்றும் தந்தைக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார். சங்கர் கொலை செய்யப்பட்டதையடுத்து குடிசை வீடாக இருந்த அவரது வீடு பசுமை வீடு கட்டும் திட்டத்தில் கட்டி கொடுக்கப்பட்டது. 

சங்கரின் தந்தைக்கு அரசு வேலை வழங்கினார். கவுசல்யாவுக்கு குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்டில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. மேலும், கோவை வெள்ளலூரை சேர்ந்த பறை இசை கலைஞர் சக்தி என்ற வாலிபரை கவுசல்யா மறுமணம் செய்து அதுவும் விவகாரத்தில் முடிந்தது.

நான்கு மாதங்களுக்கு முன்னர், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த கவுசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார். அதில்," இந்தியா ஒரு தேசமல்ல. தமிழகம் ஒரு மாநிலமல்ல. இந்தியா தமிழகத்திற்கு துரோகம் செய்கிறது" என பிரிவினை ஏற்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். 

இதனால் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி, அவரை வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இந்நிலையில், கவுசல்யா மன்னிப்பு கடிதம் வழங்கியிருப்பதால், அதை ஏற்று அவருக்கு மீண்டும் பணி வழங்கியிருப்பதாக கன்டோன்மென்ட் நிர்வாக அதிகாரி ஹரிஷ்வர்மா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again job for kousalya


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->