சோன முத்தா போச்சா... ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வந்த சோதனை..! ஓடவும் முடியாது ஒலியவும் முடியாது..! - Seithipunal
Seithipunal


தொலைத்தொடர்பு துறை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஜியோ நிறுவனத்தின் என்ட்ரிக்கு பிறகு தொலைத்தொடர்பு துறை சந்தையில் கடும் போட்டி நடந்தது. நிறுவனங்கள் அனைத்தும் போட்டி போட்டு அதிரடி சலுகைகள் மற்றும் கட்டண குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதனால் பல நிறுவனங்களின் வருமானம் கடுமையாக பாதிப்புக்குள்ளானது. இதனால், இதற்கு மேலும் சலுகைகள் மற்றும் கட்டண குறைப்பை மேற்கொண்டால் தொழிலை நடத்துவது மிகவும் கடினம் என்று உயர்ந்த ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சமீபத்தில் மொபைல் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தியது. இதனால் அந்த நிறுவனங்களுக்கு ஒரு வாடிக்கையாளர் வாயிலான வருவாய் அதிகரித்தது.

இந்த நிலையில் நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் நேற்று திடீரென அதிரடியாக குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்துக்கான (28 நாட்கள் வேலிட்டி) கட்டணத்தை ரூ.23-லிருந்து ரூ.45ஆக கூட்டியது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்துக்கான இனி கூடுதலாக ரூ.22 செலவழிக்க வேண்டும். கட்டண செல்லுபடியாகும் கால இறுதிக்குள் ரூ.45 அல்லது அதற்கு அதிகமான வவுச்சரை ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், சலுகை காலத்துக்கு பிறகு அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again airtel raised minimum charge


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->