கோவையை தொடர்ந்து தமிழகமெங்கும் நடக்கும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்! - Seithipunal
Seithipunal


பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை குறிவைத்து நடக்கும் சம்பவங்கள்!

கோவையில் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை பதட்டமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதுவரை சுமார் 8 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை அரங்கேற்றியுள்ளது. குறிப்பாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்களை குறி வைத்து மட்டுமே இச்சம்பவங்கள் நிகழ்கிறது. 

இதுவரை கோவையில் மட்டுமே அரங்கேறி வந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தற்போது தமிழகமெங்கும் பரவி உள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் ராஜராஜேஸ்வரி தெருவில் வசித்து வரும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் சீதாராமன் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை சேர்ந்த பாஜக ஆதரவாளரும் மருத்துவர்வமான டாக்டர் மனோஜ் குமார் காருக்கு நபர்கள் தீ வைத்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி பதிவானது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜகவின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தவர் செந்தில் பால்ராஜ். இவர் திண்டுக்கல் மாவட்டம் அடுத்த குடைபாறைபட்டியில் வசித்து வருகிறார். இவர் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் விற்பனையாக வைக்கப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டியில் பாஜக நிர்வாகி சிவசேகரன் சொந்தமான காரை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தி உள்ளனர். வீட்டின் முன் கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நகரில் தீ வைத்துள்ளனர்.

கோவையை தொடர்ந்து தமிழகம் எங்கும் அடுத்தடுத்த நடக்கும் இது போன்ற குற்றச்சம்பவங்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் தற்பொழுது தமிழகமெங்கும் பரவி உள்ளதால் மக்களிடையே பதற்றத்தை உண்டாக்கியுள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

After Coimbatore incidents of petrol bombings are happening all over Tamil Nadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->