கிருஷ்ணகிரி || அரசனட்டியில் 15 வருடங்களுக்குப் பிறகு பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழிபாடு.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 வருடங்களுக்குப் பிறகு பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழிபாடு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசனட்டியில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஹரியம்மா, ஸ்ரீ கரியம்மா, ஸ்ரீ ஆனகோண்ட்லம்மா தேவி கோயில் கும்பாபிஷேக விழா, பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நேற்று தொடங்கியது. 

இதில் சம்பன்னி சாமி, அஜ்ஜய்யா சாமி, ஆனேலிங்கேஷ்வரா சாமி, அகதூர் சாமி, முகலூரு வீரபத்திர சாமி, ஒசராய சாமி, சித்தேஸ்வர சாமி, சிக்கம்மா தொட்டம்மா தேவிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம தேவதைகளின் சிலைகள் மேள, தாள முழக்கத்துடன், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் முன்னே செல்ல, சாமி சிலைகள் ஊர்வலமாக அருகில் உள்ள மைதானத்திற்கு எடுத்து செல்லப்பட்டன.

இதையடுத்து கோவில் கமிட்டி மற்றும் விழா குழுவினர் சார்பில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். மேலும் அலங்கரிக்கப்பட்ட மாடுகள் தலைமீதும் தேங்காய்கள் உடைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.

விமர்சையாக நடைபெற்ற இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் ஓசூர், சூளகிரி மற்றும் பெங்களூருவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதையடுத்து விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

After 15 years devotees worship by breaking coconuts on their heads in kirishnagiri


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->