அதிமுகவில் மீண்டும் உட்கட்சி தகராறு?... அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வாதம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கட்சிகளின் தலைமை சார்பாக அரசியல் பிரச்சாரங்களுக்கு தேர்தல் வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 

தேர்தல் நெருங்கிவிட்டால் அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதை போலவே, அரசியலில் உட்கட்சி பூசல் கொண்டுள்ள சம்பவங்களும் வெளியே வரத்தொடங்கும். பல மாதங்களுக்கு முன்னதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன், " அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எந்த தொகுதியில் களமிறங்கி போட்டியிட்டாலும் அவரால், வெற்றியை பெற இயலாது. கட்டாயம் அவர் தோல்வியை சந்திப்பார் " என்று தெரிவித்தார். இது அங்குள்ள அதிமுக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Supporters Gang Fight Virudhunagar 21 December 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->