சசிகலாவின் வருகை... அதிமுக வட்டாரத்தில் தொடரும் சலசலப்பு..! - Seithipunal
Seithipunal


அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெங்களூரில் சிறையில் இருந்து வரும் சசிகலாவும், இம்மாதம் 27 ஆம் தேதி விடுதலையாகிறார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவில் தாக்கம் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

ஆனால், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான கே.பி முனுசாமி போன்றோர், சசிகலாவால் எவ்விதமான பிரச்சனையும் வராது. அவரை அதிமுகவில் இணைக்கும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்தார். இதுஒருபுறமிருக்க சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவில் குரலும் ஒலிக்க துவங்கியுள்ளது. 

அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திராவும் சசிகலாவை புகழ்ந்து பேசிய நிலையில், இதற்கு அதிமுகவிற்கு உள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. மேலும், அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவினர் யாரும் சசிகலாவுக்கு ஜால்றா அடிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா சசிகலாவை புகழ்ந்தார். அவர் பேசும்போது, ஜெயலலிதாவுடன் தவ வாழ்வு வாழ்ந்தவர் சசிகலா. அவரைப்பற்றி யாரும் தவராக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஆவேசமாக பேசினார்

இதற்குள்ளாகவே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், " அதிமுக - அமமுக இடையே நடப்பது தாய் இல்லாத நேரத்தில் நடக்கும் அண்ணன் - தம்பி சண்டை போன்றது. சசிகலா விடுதலையாகி வந்ததும், அதிமுகவை பலப்படுத்தும் முயற்சியை எடுப்பார்கள் " என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், " அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெளிவில்லாமல் இருக்கிறார். இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்தவர்கள் எப்படி அண்ணன் - தம்பியாக மாற இயலும்? " என்று தெரிவித்தார். இதனால் சசிகலா விடுதலை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் இதழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, திமுகவை எதிர்க்க சசிகலா அதிமுகவில் இணைய வேண்டும். அதிமுக தமிழகத்தில் இல்லை என்றால் ஆன்மீகமும், தேசியமும் இருந்திருக்காது. எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல ஆளுமை இருக்கிறது " என்று தெரிவித்தார். இதனால் சசிகலாவின் வருகை அதிமுகவில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது?. இதனை அதிமுக எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள்? என்பது விரைவில் தெரியவரும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Sasikala Issue 15 Jan 2021 Update


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->