#Breaking: அதிமுக - பாமக வெற்றிக்கூட்டணி.. வெற்றிக்கனி உறுதி..! - Seithipunal
Seithipunal


அதிமுக சார்பில் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார், செம்மலை, அதிமுக மூத்த நிர்வாகிகளும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, வடக்கு மண்டல பொதுச்செயலாளர் ஏ.கே மூர்த்தி, வழக்கறிஞர் கே.பாலு உட்பட முக்கிய நிர்வாகிகள் அதிமுக - பாமக தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்தனர். 

அதிமுக - பாமக சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிகாரபூர்வமாக நிறைவு பெற்றதை அடுத்து, தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், " இருதரப்பு தொகுதிகள் எண்ணிக்கை மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொகுதிகளின் பட்டியல்கள் ஆலோசனைக்கு பின்னர் தெரிவிக்கப்படும். அதிமுக கூட்டணியில் என்னென்ன கூட்டணிகள் கலந்துகொள்கிறது என்ற தகவல் செய்தியாளர்களுக்கு முதலில் தெரிவிக்கப்படும் " என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK PMK Alliance Done Successfully Pressmeet Speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->