#Breaking: அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு எத்தனை இடங்கள்.. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு.! - Seithipunal
Seithipunal


கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள்  கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, நேற்று தமிழக சட்டப்பேரவையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. இது பாமகவின் 40 வருட போராட்டத்துக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி ஆகும்.

தமிழகத்தில் மக்கள் தொகையில் பெரும் இனம் என்றால் அது வன்னியர் இனமே. அதற்கான சமூக நீதியை பெற்று தந்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி என்று பாமக அறிவித்து இருந்தது. தற்போது வன்னியர்களுக்கு என்று 10.5 % உள்ஓதுக்கீடு உறுதியாகிதை அடுத்து அதிமுக - பாமக கூட்டணியும் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், இன்று (27 பிப்) அதிமுக - பாமக சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிகாரபூர்வமாக நிறைவு பெற்றதை அடுத்து, தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிற கட்சிகளுடன் கூட்டணிகள் இறுதி செய்யப்பட்ட பின்னர், பாமக களம்காணும் தொகுதி தொடர்பான விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக சார்பில் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார், செம்மலை, அதிமுக மூத்த நிர்வாகிகளும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, வடக்கு மண்டல பொதுச்செயலாளர் ஏ.கே மூர்த்தி, வழக்கறிஞர் கே.பாலு உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK PMK Alliance Confirmed and List of Consultancy 27 Feb 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->