அதிமுகவில் உருவான கலகக்குரல்! ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக எடுத்த புதிய முடிவு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, தலைமை ஒருங்கிணைப்பாளராக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பொறுப்பு வகிக்கிறார்கள். 

இவர்கள் தலைமையில் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை சந்தித்த, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் படு தோல்வியை சந்தித்ததால், கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டுமென எம்எல்ஏக்கள் சிலர் கலகக் குரலை எழுப்பி உள்ளார்கள். ஆயினும் கட்சியில் தற்போது அமைச்சராக இருக்கும் அனைவரும் தற்போது முதலமைச்சர் துணை முதலமைச்சர் சிறப்பாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், கட்சி ஒற்றுமையுடன் தான் இருக்கிறது எனக் கூறி வருகிறார்கள். 

இந்நிலையில் தேவையற்ற இந்த குழப்பத்தை சரி செய்வதற்காக அதிமுக தலைமை புதிய முடிவெடுத்துள்ளது. அதனடிப்படையில் கட்சி தலைமை அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது. கட்சி தலைமை அனுப்பியுள்ள அறிக்கையில், "அனைத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை அமைச்சருமான திரு ஓ பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் தலைமை கழகத்தில் வருகின்ற 12 06 2019 புதன்கிழமை காலை 10 மணிக்கு தலைமை கழக நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக செய்தி தொடர்பாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

மேற்கண்ட பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்" என ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளார்கள். 

இந்த கூட்டத்தில் யார் யார் கலந்து கொள்வார்கள் யார் யார் புறக்கணிப்பார்கள் என்பதனை பொருத்தே அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்பதனை நாம் கூற முடியும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk party meeting on 12th june


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->