நெருங்கும் சசிகலா விடுதலை.. முதலமைச்சர் எடுத்த திடீர் முடிவு.! வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் தற்போது தேர்தல் பிரச்சாரம் தற்போது களைகட்டியுள்ளது. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் முனைப்புடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில கட்சிகள் கூட்டணி அமைத்தும் , சில கட்சிகள் தனித்து தேர்தலை சந்திக்க உள்ளனர். 

இந்நிலையில், ஜனவரி 22ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடன்  ஆலோசனை நடத்த உள்ளார். 22 ஆம் தேதி தலைமைச் செயலகம் வர அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் நிலை உள்ளது.

மேலும், ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, சட்டமன்ற பொதுத்தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலா 27ஆம் தேதி விடுதலையாக உள்ளதால், சசிகலா விடுதலை குறித்தும், அதிமுகவின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ministers meeting on jan 22


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->