அதிமுக அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம்.. எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் பெருங்காமநல்லூரில் தியாகிகள் நினைவு மண்டபம் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மேலும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜ், வருவாய் துறை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றப்பரம்பரைசட்டம் மற்றும் கைரேகை சட்டம் 1920 ஆம் ஆண்டு பெருங்காமநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது 16 சுதந்திர போராட்ட வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

அவர்கள் வீரத்தை பறைசாற்றும் வகையாக, அந்த இடத்தில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த தமிழக முதலமைச்சர், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று கூறினார். 

அதன் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், மணிமண்டபம் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மணிமண்டபம் அமைப்பதற்கு திட்டம் மதிப்பீடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் நடைபெறும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ministers meeting for perungamanallur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->