கொரோனா பயம், அமைச்சர் செய்த காரியம்.! வைரலாகும் போட்டோ.. பொதுமக்கள் அதிருப்தி.! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள யூகான் நகரினை மையமாக வைத்து பரவிவந்த கரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் சுமார் 160 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரசால் உலகம் முழுவதும் 8,982 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

இந்தியாவிலும் தற்போது வரை 174 பேர் மருத்துவமனைகளில் அனுமதியாகியுள்ள நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 2 பேருக்கு கரோனா அறிகுறி உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று கூறி பேனர் வைத்துள்ளார். ஈரோடு மாவட்டம் முழுவதிலும் இருக்கும் கோவில், பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இங்குள்ள கோபிச்செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீடு, தோட்டம் மற்றும் சட்டமன்ற அலுவலகம் முன்னதாக அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த பேனரில், கரோனா வைரஸ் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தன்னை இம்மாத 31 ஆம் தேதி வரை யாரும் பார்க்க வர வேண்டாம் என்றும், சென்னையிலும் இதனை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk minister banner


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->