உத்தரவை மீறினால் அவ்வுளவுதான்.. முக்கிய புள்ளிகளுக்கு அதிமுக தலைமை ஆர்டர்?..! - Seithipunal
Seithipunal


அமைச்சர்கள் சசிகலா குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது தொடர்பான தகவலில், இருவேறு தகவல்கள் உலாவி வருகிறது. 

சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருந்த சசிகலா, அபராத தொகையை செலுத்தி சிறை தண்டனை நிறைவு பெற்று விடுதலை ஆகினார். பெங்களூரில் இருந்து சென்னை வரை வழிநெடுகிலும் முன்னதாகவே தென்மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட தொண்டர்கள் உள்ளூர் மக்களை போல வரவேற்பு அளித்ததாக கூறப்படுகிறது. 

சென்னைக்கு வரும் போது தனது காரில் அதிமுக கொடியை உபயோகம் செய்த நிலையில், இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர், அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சார்பாக சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. 

தமிழகத்திற்கு வந்ததும் இங்குள்ள அரசியல் நிலவரத்தை பார்த்து மிகுந்த வேதனையடைந்த சசிகலா டிடிவி தினகரனிடம் என்ன செய்து வைத்திருக்கிறாய்? என கொந்தளித்ததாகவும், அதிமுக - அமமுக இணைப்பு பணிகள் மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. 

பேச்சுவார்த்தை தொடர்பான தகவலை முழுவதுமாக எதிர்த்த அதிமுக தலைமை மற்றும் மூத்த நிர்வாகிகள், சசிகலாவிற்கு கட்சியில் இடம் இல்லை என்று நெத்தியில் அடித்தவாறு வெளிப்படையாகவே அறிவித்தனர். ஆனால், சில அதிமுக அமைச்சர்கள் அமைதிகாத்து வரும் நிலையில், இவர்களின் மவுனத்திற்கு இருவேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. 

இதில், அமமுக தரப்பில் உள்ளவர்கள் சில அமைச்சர்களின் மவுனத்திற்கு அவர்கள் அமமுக - அதிமுக இணைவு அல்லது, அவர்களே அமமுகவில் இணைவார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதிமுக தலைமையின் உத்தரவுப்படி, அதிமுக - அமமுக தொடர்பான எந்த ஒரு கேள்விக்கும் யாரும் பதில் அளிக்கக்கூடாது எனவும், அது தொடர்பான கேள்வியை தவிர்க்காமல் தேவையில்லாமல் கருத்து தெரிவித்தால் மேற்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உடன்பட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK HO Order to Ministers and MLA about Sasikala Question on Pressmeet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->