அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.சந்திரன் உயிரிழந்தார். சந்திரனின் நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் தொற்றுக்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் இருந்து சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சந்திரன் சிச்சை பெற்றுவந்தார்.

சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் சந்திரனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர், இருப்பினும் முன்னாள் எம்எல்ஏ சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்திரனின் மறைவுக்கு அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Ex MLA Sivaganga Chandran Passed away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->